பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உள ஆரோக்கிய விழிப்புணர்வு செயலமர்வு

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உள ஆரோக்கியம் மற்றும் உள நெருக்கீட்டு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு (30) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதான வளவாளராக விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனகுமார் கலந்து கொண்டு செயலமர்வை வழிநடத்தினார்.
இச்செயலமர்வின் போது, பணிச்சுமை காரணமாக உருவாகும் மன அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது, மனநலத்தை பேணுவதன் முக்கியத்துவம், தொழில்சார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பேணும் வழிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் விளக்கமளிக்கப்பட்டன.
மேலும், உள நெருக்கீட்டை குறைக்கும் நடைமுறை வழிமுறைகள், தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் நேர்மறை சிந்தனையின் அவசியம் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் விக்னேஸ்வரியின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் செயலகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.