இதுவரையில் 203 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தெனியாய, தியத்தலாவ, ரிகில்லகஸ்கட மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலேயே இந்த நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த நோய் பரவல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற பயமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
இதேவேளை, இந்நோய் குறித்து தொற்றுநோயியல் நிபுணர்கள் தற்போது விரிவான பரிசோதனைகள் ஆரம்பித்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.
