தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரி இணைந்து நடாத்தும் மேற்படி பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் நகர் அறநெறி பாடசாலையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கலந்து கொண்டு தெரிவு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன் பிரகாரம் டென்மார்க்கில் உள்ள சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் அதிபரும் நிறுவனருமான திருமதி குமுதினி பிரித்விராஜ் அவர்களின் வழிகாட்டலில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான பஞ்சபுராண பண்ணிசைப் போட்டிக்கான தெரிவு போட்டிகள் நடைபெற்று மாணவர்கள் தெரிவு நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு செங்கலடி, கணபதிநகர் ரமேஸ்புரம், ஐயன்கேணி, களுவன்கேணி, போன்ற கிராமங்களில் உள்ள ஆறு அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் வரை போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி பஞ்சபுராண பண்ணிசைப் போட்டிக்காக 30 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதோடு போட்டி நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட உள்ளன .
இதற்கான சான்றிதழ் மற்றும் நிதி உதவிகளை டென்மார்க் சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் அதிபரும் நிறுவனருமான திருமதி குமுதினி பிரித்விராஜ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.