மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (08/10/2025) புதன்கிழமை
காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் தூக்கம் காரணமாக
வீதியை விட்டு விலகி வீதியோரமாக பயணித்தவர் மீது மோதியே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.
இவ்விபத்தில் ஓட்டமாவடி-01, பதியுதீன் மஹ்மூத்
வீதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனி முகம்மது முகம்மது
இப்றாஹீம் (வயது - 63) என்பவர் மரணமடைந்துள்ளார்.
வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.