பொய்ப் பிரச்சாரம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி உணர்ந்திருக்கும் - கந்தசாமி பிரபு

 


(செங்கலடி நிருபர் - சுபஜன்)

பொய்ப் பிரச்சாரம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி உணர்ந்திருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

“உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்”  என்ற தேசிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நான்கு வீடுகளை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் கே .தனபாலசுந்தரம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

  ஆறுமுகத்தான், குடியிருப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி, எல்லைநகர் மற்றும் வந்தாறுமூலை ஆகிய பிரதேசங்களில் இந்த வீடுகள் நிருமானிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டத்தின்கீழ் எழுபது வீடுகள் அமைக்கப்படுகின்றன.

ஓவ்வொரு வீட்டிற்கும் தலா பத்து இலட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

 நாட்டில் வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட திட்டம் இதுவாகும்.

இன்றைய இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , செக்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்.திலகநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது  கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு. 

முதற்கட்டமாக வழங்கப்பட்ட 70 பேருக்கான வீடுகள் இன்று பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கான  வீடுகளை கையளிக்கின்ற நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இன்று  செய்து வருகின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வீடற்ற பயனாளிகளுக்கான வீடுகளை கையளித்துள்ளோம். 

 ஒவ்வொருவரது தமது அடிப்படை தேவையாக உள்ள கனவு இல்லம் என்பது அந்தக் கனவு இல்லத்தை நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த கனவை நனவாக்கியுள்ளோம். எங்களது கொள்கை எமது இலங்கை பிரஜைகள் வீடு  இல்லாமல் தவிர்த்து விடக் கூடாது என்பது.

 ஜனாதிபதியின் தேசியக் கொள்கை  ஊடாக எமது அமைச்சர்களால் வீடுகளை அமைத்து வழங்குகின்ற வேலை திட்டங்களை ஆரம்பித்து உள்ளோம். 

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியை சார்ந்த குழப்பவாதிகள் திருடன் கூட்டம்,  இன்று எங்களை குறை கூறிக் கூறினர்.  ஆறு மாதங்கள் கூட இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தை கொண்டு நடத்த முடியாது, சர்வதேச ஆதரவு கிடையாது அரசாங்கத்தில் இருக்கின்ற தரப்பினருக்கு எந்த ஒரு முன்அனுபவமும் கிடையாது, ஆட்சியை நடத்துவதற்கு அவர்களால் முடியாது, என பலவிதமான பொய்களை கூறிக் கொண்டிருந்தார்கள் ஆனால் இன்று நாம் ஒரு வருடத்தை கடந்துள்ளோம். இந்த ஒரு வருட காலப்பகுதியினுள்ளே மக்களின் நன்மதிப்பை வென்ற ஒரு அரசாங்கமாக இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளது.

 இந்த நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க இந்த நாட்டை எவ்வளவு நேர்மையாகவும் சரியான பாதையில்  கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்ற விடயத்தை மக்கள் நன்று அறிந்துள்ளனர். 

எங்கு சென்றாலும் ஜனாதிபதிக்கான ஆதரவு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் இந்த நாட்டினை  சிறப்பாக நடத்தக்கூடிய இந்த நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு அரசாங்கம் என்று மக்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். 

ஆகவே தான் மக்கள் நன்று அறிந்து உள்ளார்கள். இந்த அரசாங்கம் நேர்மையாகவும் நீதியாகவும் , அதே நேரம் பொருளாதார ரீதியிலே முன்னேற்றம் அடைகின்ற நாட்டைக் கொண்டு செல்கின்ற தரப்பினராக இருக்கின்றது என்ற விடயத்தினை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். 

ஆகவே இந்த ஒரு வருட குறுகிய காலத்தின் உள்ளே பொருளாதார இஸ்திர தன்மையை ஏற்படுத்தியுள்ளோம்.  சமூக ரீதியாக மக்களை சந்தோஷமான தமது வாழ்வை நடத்துவதற்கான முனைப்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.  இன்று மக்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் மக்கள் தமது நன்றிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

பொய் பிரச்சாரம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி உணர்ந்து இருக்கும் என நான் நம்புகின்றேன்.