தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 22.09.2025 ஆம் திகதி திங்கள் காலை பாடசாலையில் அதிபர் முருகேசுப்பிள்ளை குணேசலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலய மாணவிகள் இருவர் அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் வெற்றி பெற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கொழும்பு விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இல் குறுநாடக ஆக்கம் முதலாமிடம்
அரிகரன் சப்தனா, கவிதையாக்கம் முதலாமிடம் தேவரெத்தினம் திஷாந்தனா ஆகிய மாணவிகள் வெற்றிபெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 4 ஆம் பிரிவில் சிறுகதையாக்கப் போட்டியில் 4ஆம் இடம் பெற்ற மாணவி கணேசன் ஹோகிலவதனா மற்றும் கராத்தே 17 வயது பிரிவு தேசியமட்டத்தில் பங்கு பற்றியமைக்காக கமலராசா சுஷர்மன் ஆகிய மாணவர்களுக்கும் கௌரவம் வழங்கப்பட்டது.
இச்சாதனையை நிலைநாட்டிய மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்த பாடசாலை ஆசிரியர், வழிப்படுத்திய அதிபர், ஆலோசனை வழங்கி ஊகுவித்த வலய தமிழ் பாட இணைப்பாளர், கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், பெற்றோர் ஆகியோருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்வி சமூகத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.