இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.ஸ்ரீநாத் அவர்களின் முயற்சியில் இம்முறை க.பொ.த உயர்தர பிரிவில் பரீட்சை எழுந்துள்ள கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான இலவச நான்கு நாள் கருத்தரங்கு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை பக்தியில் ஆரம்பமாகியது. தாயக ஊற்று அமைப்பின் தலைவர் இ.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்தியரும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபக தலைவருமான இ.சிறிநாத் , செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் ,கல்குடா கல்வி வலைய கல்வி அலுவலக அதிகாரிகள் , சமூக செவையாளர் சர்மினி உதயகுமார் , பாசாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
முதற்கட்டமாக கல்குடா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான நான்கு நாள் இலவச கருத்தரங்காக இது இடம்பெறவுள்ளது டன், மேலும் பல கட்டங்களாக இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இதன் போது இவ் இலவச கருத்தரங்கிற்கு அனுரசனையாளர்களில் ஒருவரான சர்மினி உதயகுமாருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விரிவிரையாளர் கே.மயூரன் அவர்களினால் மாணவர்களுக்கான கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது .