மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணா, சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கனகசுந்தரம்,பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா,பிரித்தானிய பெரியகல்லாறு ஒன்றியத்திலிருந்து பிரசாத் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழாவுக்கான அனுசரணையினை குளோபல் வின் ஸரிட்டி,பிரித்தானிய பெரியகல்லாறு ஒன்றியம் என்பன வழங்கியிருந்தது.
இதன்போது பல்வேறு நிலைகளில் சாதனை படைத்த மாணவர்கள் நினைவுச்சின்னங்கள் சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாதனையாளர் பாராட்டு விழாவுக்கு அனுசரணை வழங்கியவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.