விசேட நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்திற்கமைய 'இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்' எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து 15 ஆம் திகதி உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் பொதுமக்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள், மண்டப ஒழுங்குகள், குடிநீர் வசதிகள், நடமாடும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆளனிகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அரசாங்க அதிபரினால் விரிவாக ஆராயப்பட்டு பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.