கலாநிதி மு.கோபாலரட்னத்தின் மணி விழாவும் புத்தக வெளியீடும்


கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவரான கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக இருந்து ஓய்வுபெற்றுச்சென்றுள்ள கலாநிதி மு.கோபாலரட்னத்தின் மணி விழாவும் புத்தக வெளியீடும் களுதாவளையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் கலாநிதி சி.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரிகள்,ஓய்வு நிலை நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.  

நாற்பது வருட அரசேவையில் இருந்து ஒய்வு பெறும் அமைச்சின் முன்னாள் செயலாளர் மூ.கோபாலரெத்தினம் (இலங்கை நிருவாகசேவை) அவர்களின் 'மூகோவின்' மணிவிழாவும் சிறப்பு மலர்களான “இலங்கையின் சமூகப்பொருளாதார அரசநிலைமைகளின் சமகாலப் போக்குகள்” மற்றும் “மூகோவின் 40வருட அரசசேவையின் தடங்கள்” நூல்கள் இதன்போது வெளியீடுசெய்யப்பட்டன.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கலாநிதி மு.கோபாலரட்னம் மற்றும் அவரது பாரியார் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.