வவுனியாவில் இயங்கும் பிரபலக் கல்வி நிலையமொன்றில் இன்று காலை 19 வயதுடைய மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலுள்ள கல்வி நிலையக் கட்டிடப் பிரிவுக்குள் அமைந்துள்ள கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.
அப்போது அருகிலிருந்த இளைஞர்கள் சிலர் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டு, உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.