கடந்த சாதார தர பரீட்சையில் நோய் தாக்கத்தினையும் பொருட்படுத்தாது சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
குறித்த சிறுவனின் என்பு நோய் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணா அவர்களினால் ஒரு தொகை பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனை இன்றைய தினம் அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணா ஆகியோர் சத்திர சிகிச்சைக்கான பண உதவியை வழங்கி வைத்தனர்.
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் சத்திர சிகிட்சைக்கு 40 இலட்சம் தேவைப்படுவதாக கூறியதை செவிமடுத்த அரசாங்க அதிபர் தம்மாலியன்ற உதவியை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
இன்று தனது வீடு தேடி சென்று ரூபாய் (6) லட்சம் பண உதவி செய்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும், குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணாவுக்கும் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.