காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்கா தெரிவித்தார். நேற்று வியாழக்கழமை பகல் 1 மணியளவில் மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபரை காணவிலாலையென உறவினர்கள் தேடிக்கொண்டிருந்த நீலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த
நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல் தம்பி தங்கவேல் என்பவரே
உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.