திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று (03) இடம் பெற்றுள்ளது.
இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து தேனுவர ஹென்றிகே விநோத் (33வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது ஏற்கனவே இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞர் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.