மணல் அகழ்வுக்கு எதிராக விழிப்புணர்வு போராட்டம்


பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் கூறுகையில்:-

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வழங்களில் ஒன்றாக மணல் இருக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் நிறுவனங்களினால் மணல் அகழ்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் வகையில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.