ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) மாலை நண்பர்களுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
கொட்டகலை பகுதியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.