பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டியானது 09,10 மற்றும் 11 ஆகிய தினங்களில் திருகோணமலை உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இப் போட்டியில் மட்/ககு/ வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களான A.சதுபக்சலன், U.ரிதாசாயினி ஆகிய மாணவர்கள் வெண்கலப் பதக்கங்கள் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.