குடும்ப தகராறில் மருமகனின் மண்டையை உடைத்த மாமா


குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம், தெஹியோவிட்டவில் இடம்பெற்றுள்ளது.

தெஹியோவிட்ட பம்போகம பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இறந்தவர் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 45 வயதுடைய ஆணொருவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான 85 வயதான மாமாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மருமகனின் தலை மற்றும் நெஞ்சில் மாமா தாக்கியுள்ளார்.

இதனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.