பதுளை – மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெலுவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.
மேற்படி நபர் நண்பர்களுடன் இணைந்து பண்டாரவளையில் இருந்து மஹியங்கனை நோக்கி சுற்றுலாவுக்குச் சென்றுள்ள நிலையில், நெலுவ வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.