மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் சவால்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளும் போது உக்கும் கழிவுகளையும் உக்காக்கழிவுப் பொருட்களையும் உரியமுறையில் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதுடன் சட்ட விரோதமான முறையில் கழிவுகளை அகற்றாது சமூக பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திண்மக்கழிவகற்றலின் போது சவாலாக காணப்படும் வாகனப்பற்றாக்குறை, தூரப்பிரதேசத்திற்கு கொண்டு செல்லுதல், உக்காத திண்மக்கழிவுகளை அகற்றுவதில் உள்ள காலதாமதம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேற்கொண்டு வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான சாத்திய வளங்கள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை, ஆணையாளர், தவிசாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவி பணிப்பாளர்கள் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.