கல்வி சீர்திருத்தம் பயனளித்து இருந்தால் இந்த நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும்!

 



கல்விச் சீர்திருத்த விவாத்தில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஶ்ரீநேசன் அவர்கள் கல்வி சீர்திருந்தம் தொடர்பாக இன்று (24) உரையாற்றுகையில் 77 ஆண்டுகளுக்கு பின்னர் கல்வி சீர்திருத்தம் கொண்டு சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளால் கொண்டு வரப்பட்டது.

இந்த கல்வி சீர்திருத்தங்கள் பயனளித்து இருந்தல் எமது நாடு நிலையான அபிவிருத்தியை கொண்டு இருக்க முடியும்.

நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி இருக்க முடியும். இந்த நாட்டில் தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்று இருக்க முடியும் தொழில் வேலைகள் கூட எமது நாட்டில் செய்யக் கூடியதாக இருந்து இருக்கும்.

ஆனால் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்த கல்வித் திட்டங்கள் ஏனோ ஒரு வகையில் தோல்வியடைந்து, இருக்கின்றது.

ஆகவே தற்போது கொண்டு வரப்படுகின்ற இந்த கல்வி சீர்திருத்தம் என்பது நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய விதத்திலும்,சமூகங்களில் ஐக்கியத்தை எற்படுத்தும் விதத்திலும்,ஒழுக்க விழுமியத்தை பேணக் கூடிய விதத்திலும், தொழில் வாய்ப்புக்களும் பெறக் கூடிய விதத்தலும் தொழில்நூட்ப அறிவை பேணக் கூடிய விதத்திலும், விஞ்ஞான கணித அறிவை பெறக் கூடிய விதத்திலும் சீர்திருத்தம் அமைய வேண்டும்.அவ்வாறு அமைவதற்கு ஏற்ற விதத்தில் உங்களுடைய செயற்பாடு அமைந்திருக்கும் என்பதை நான் நம்புகின்றேன்.

என நாடாளுமன்றத்தில் ஞானமுத்து ஶ்ரீநேசன் அவர்கள் உரையாற்றினார்.