2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது காலாண்டிற்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதம கணக்காளர் ,பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர்,உள்ளகக் கணக்காய்வாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொடர்புடைய சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.