கிண்ணியாவில் கோழி இறைச்சிக் கடைகள் சுற்றிவளைப்பு!




திருகோணமலை - கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்த கோழி இறைச்சிக் கடைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்.ஏ.எம்.எம். அஜித்தின்  வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர்களினால்  குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன் போது நுகர்வோர்க்கு பொருத்தமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.  

அத்துடன் இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் கோழி இறைச்சி கடைகளில் குளிர்சாதனப் பெட்டியின் குளிர் நிலைமையும் பரிசோதனை செய்யப்பட்டது. 

எதிர்வரும் நாட்களில் ஏனைய இறைச்சி கடைகளிலும் இவ்வாறான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத்  தெரிவித்தார்.