யாழ்ப்பாண மாவட்ட சிறு நடுத்தர முயற்சியாளர்களுக்கான செயலமர்வு




யாழ்ப்பாண மாவட்ட சிறு நடுத்தர முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை தெளிவுபடுத்தும் செயலமர்வானது யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தலைவர் றோட்டரியன் ஜி. விஸ்வரூபனின் வரவேற்புரையுடன் இன்று புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் உள்ளூர் சிறு நடுத்தர முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் வகையிலான தரம் பேணுதல் மற்றும் வழிகாட்டுதல்களும் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இச் செயலமர்வு றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்.