ஆரையம்பதியில் பாரிசவாத புனர்வாழ்வு மையம் திறந்து வைப்பு



பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் அழைப்பின் பேரில் வருகை தந்த வைத்தியர் அசேல குணவர்தன (சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்) இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

பாரிசவாதத்தால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை சரிசெய்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் வகையில் நிபுணத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளான,

நரம்பியல் நிபுணத்துவ சேவை , மூட்டுவாத இயல் நிபுணத்துவ சேவை ,உளநல வைத்திய நிபுணத்துவ சேவை  ஆயுர்வேத வைத்திய சேவை , உடற்திறன் சிகிச்சை சேவை , தொழில் நுட்ப சிகிச்சை சேவை  மற்றும் பேச்சுத் திறன் சிகிச்சை சேவை ஆகியவை இந்த மையத்தில் வழங்கப்படும்.

நோயாளிகள் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளையும், தொழில்சார் திறன்களையும் மீண்டும் பெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில் சிகிச்சைகள், அத்துடன் மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு உளநல ஆலோசனை போன்றவையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.