காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான மனு ஒத்திவைப்பு


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியில் காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காக தவணையிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அம்பிகா ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.