காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டிலிருந்து நகையை திருடிய காதலி!




தனது 'டிக் டொக்' காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க உறவினர் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, காதலன் உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். 

 புலம்பெயர் தேசத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்பிய குடும்ப பெண், தனக்கு உதவியாக நெருங்கிய உறவினரான குறித்த யுவதியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது உடமையில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போவதை உணர்ந்த பெண், குறித்த உறவினரான யுவதியை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

 இந்நிலையில் மீண்டும் ஒரு நாள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த யுவதியை, நிற்குமாறு கூறிவிட்டு குளியளறைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும் போது தாலிக்கொடி காணாமல் போயுள்ளதுடன் குறித்த யுவதியும் அங்கிருந்து சென்றுள்ளார்.

 இதையடுத்து கடத்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் குறித் பெண் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுடன் 'டிக் டொக்' மூலம் அறிமுகமாகி அவரை காதலித்து வந்த நிலையில் காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் உறவினர் வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, 

அதனை காதலனிடம் கொடுத்துள்ளதாக குறித்த யுவதி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வீட்டில் நகைகளை திருடிய யுவதி , அவரது காதலன், காதலனின் மேலும் இரு காதலிகள் நகைகளை விற்க உதவியவர்கள் காதலனின் சித்தப்பா, சித்தி நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்