மட்டு நகரில் தமிழ் இளைஞர் ஒருவர் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று 01.05.2025 மாலை 5.30 மணியளவில் மட்டக்காளப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் சாமித்தம்பி யசோதரன் வயது 32 என்பவரெ இவ்வாறு கைது செய்யப்பட்டார்..
இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அவர்களின் இணைப்பு செயலாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளரும் முற்போக்குத் தமிழ் கழகத்தின் முக்கிய பொறுப்பு வகிப்பவர் எனவும் அத்துடன் பொது வேலைகளிலும் ஈடுபட்டவர் எனவும் கூறப்படுகிறது..
அவரின் கைதுக்கான காரணம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. நாட்டில் புதிய நல் ஆட்சி நிலவிவரும் காலப்பகுதியில் இப்படியான தமிழ் மக்களுக்கான அரசியல் பழிவாங்கள் மற்றும் கைதுகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது இது மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
(மாமாங்கம் நிருபர்)
