தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாவது நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட பிரதி தலைவர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இறுதி யுத்ததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஆத்மாசாந்திக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவாக கொண்ட உப்பில்லா கஞ்சி பகிரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.