சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட செட்டிபாளையம் சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நாளை


சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின்மகா  கும்பாபிசேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.05ஆம் திகதி கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கும்பாபிசேக கிரியைகள் நடைபெற்றுவருகின்றன.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.கிரியைகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்றும் 12.00மணி தொடக்கம் 12.45மணி வரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிசேகம் நடைபெறும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.