மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் பாலத்திற்குள் வீழ்ந்து சொகுசு கார் விபத்து! – ஐந்து பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம்  வெல்லாவெளி -வக்கியல்ல பிரதான வீதி ஊடாக  பயணித்த சொகுசு கார் ஒன்று நேற்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து 37ஆம் கிராமம் தும்பாலை பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தின்போது குறித்த காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

35ஆம் கிராமத்தில் மரணவீட்டுக்கு சென்றுவிட்டு குருமண்வெளி கிராமத்திற்கு திரும்பிச்சென்றுகொண்டிருக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த காரில் பயணித்த கணவன், மனைவி குழந்தைகள் உட்பட 5பேர் இருந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.