தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதுக்குடியிருப்பு மாவட்ட இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான NVQ தர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதுக்குடியிருப்பு மாவட்ட இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.குகதாஸ் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இராசதுரை அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையத்தில் NVQ தரம் மற்றும் சான்றிதழ் தர பயிற்சி நெறிகளான விவசாய கள உதவியாளர், தொழில்நுட்பம், அழகியல் கலை, தையல், மொழி விருத்தி சார் பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருகின்றது. , மூன்றாம் நிலை தொழிற்கல்வியானது மாணவர்களை சிறப்பு தேர்ச்சி மிக்கவர்களாக மாற்றுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றுவருகின்றது.
சுயதொழில் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்குற்கு தேவையான பயிற்சிகள் மாணவர்களுக்கு இங்கு வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ஜி.சுசந்த, மாகாண உதவிப் பணிப்பாளர் முபாறக்அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி அருள்மொழி நிஷாந்தி,
மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிக்குமார், கி.சதீஸ்வரி, அ.தயாசீலன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இச் சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.