ஈழமணித் திருநாட்டிள் கிழக்குப்பாகத்தில் அருணகிரிநாதரினாலும் சமயக்குரவர்களாலும் போற்றிப் பாடப்பெற்ற திருக்கோணநாதரின் நகரில் மத்தியில் மடத்தடியில் சைவமும், செந்தமிழும் தழைத்தோங்கி நிற்கும் புண்ணிய பகுதியிலே, பல வரலாற்று சிறப்புகளையும், திருவருட் சிறப்புகளையும், தன்னகத்தே கொண்ட மிகப் பழமையான ஆலயத்தில் அமர்ந்திருந்து அடியவர்களையெல்லாம் காத்து, ரக்ஷ்சித்து வரும் ஸ்ரீருக்மணி தாயார், ஸ்ரீ சத்தியபாமா தாயார் சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயமானது பெருமானுடைய பேரருளாலும், அடியவர்கள், ஆலய நிர்வாக சபையினரின் பெருமுயற்சியினாலும் மிகவும் அழகான முறையிலே திருத்தி அமைக்கப்பட்டு பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், நிகழும் குரோதி வருடம் தைத்திங்கள் 21 ஆம் நாள் (03.02.2025) திங்கட்கிழமை ஷஷ்டித் திதியும் ரேவதி நட்சத்திரமும் கூடிய காலை 9.35 மணி தொடக்கம் 10.48 மணி வரையுள்ள மீன லக்கின சுப முகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா நடைபெற திருவருள் கூடியுள்ளது.
குறித்த மஹா கும்பாபிஷேக நிகழ்வானது பிரதிஸ்டா பிரதம குரு " சிவாச்சார்ய திலகம்" - கிரியாபூஷணம்" சிவஸ்ரீ சதா ராதாகிருஷ்ண குருக்கள் ( திருகோணேஸ்வர ஆலய மகோற்ஸவ குருக்கள்) அவர்களின் தலைமையில் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
மேலும் அருளாசி வழங்கும் குரு மணிகளாக சிவஸ்ரீ சதா யோகேஸ்வர குருக்கள் ( நல்லூர்) மற்றும் வேதாகமமாமணி சிவஸ்ரீ. சோ. இரவிச்சந்திரக் குருக்கள் ( திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய ஆதினகர்த்தா) அவர்களின் பங்களிப்புடனும் நடைபெற்றவுள்ளது.