பெரியகல்லாற்றிலிருந்து லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் பெரிய கல்லாறு மக்களினால் இன்று பெரியகல்லாறு லண்டன் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.
அந்த ஒன்றியத்தின் நிதியில் இருந்து பெரியகல்லாற்றில் கணவனை இழந்த குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார நிதி உதவியாக இரண்டு லட்சம்(200,000) ரூபாய் நிதி பணமாக வழங்கப்பட்டது.
இந்த நிதியானது பெரிய கல்லாறு சர்வார்த்த ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வண்னக்கர் மற்றும் நிர்வாக சபையின் ஊடாக வழங்கப்பட்டது.

