2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான கந்தசாமி பிரபு இருதயபுரம் பாலர் பாடசாலையிலும் எஸ்.வனிதா கல்லடி விபுலானந்தா வித்தியாலயத்திலும், இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.ஸ்ரீநாத் ஆகியோர் புனித யோசப்வாஸ் வித்தியாலயத்திலும் தி.சரவணபவன் கல்லடி விநாயகர் வித்தியாலயத்திலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் பூ.பிரசாந்தன் ஆரையம்பதி மத்திய மகா வித்தியாலயத்திலும். மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு நகர் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் தங்களுடைய வாக்குகளை தொடர்ந்தும் வழங்கி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
