கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு - பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.
இன்று அதிகாலை முதல் விநாயகப்பெருமானுக்கான விசேட அபிசேக பூஜை என்பனவுடன் வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ விநாயகப்பெருமான் எழுந்தருளிய காட்சி அடியார்களை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது.
கிழக்கில் புகழ்பெற்ற மட்டக்களப்பு பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் முதல் தடவையாக இடம்பெறவுள்ள அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் வேத மந்திர பாராயணங்களுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறினார்.
முதலாவது தடவையாக தேரில் ஏறிய எம்பெருமானுக்கான விசேட பூஜையைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் , தேரோட்டம் ஆரம்பனது.
இம்முறை முதல் தடவையாக இடம்பெற்ற தேரோட்டத்தில் - பல நூற்றுக்கணக்கான அடியார்கள் புடை சூழ மிகச் சிறப்பாக தோரோட்டம் இடம்பெற்றமையும் சிறப்பம்சமாகும்.
இதேவேளை இன்றைய தினம் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக பரதநாட்டியமும் அரங்கேற்றப்பட்டது.
கடந்த 22.08.2024 கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவத்தின் தேரோட்டம் இன்று 01.09.2024 இடம்பெற்றதுடன் நாளை 02.09.2024 திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
.jpeg)



.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)