இந்த வருட இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் வள்ளிபுரம் முருகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் படமாக பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணேசமூர்த்தி, தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் முதலாவதாக ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் சஜித் பிரேமதாசர் அவர்கள் மாணவர்களுடன் கற்றல் செயல்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் நன்மை கருதி பரதநாட்டிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான ஆடைகள் மற்றும் அணிகள் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாகவும் வழங்கியதுடன் உயர்தர மாணவர்களுக்கு ஆங்கில அகராதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரினால் சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது.