ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன்


தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் மல்யுத்த சம்பியன்சிப் போட்டியில், மட்டக்களப்பு சிவானந்த தேசியப் பாடசாலை மாணவன் கிருஷ்ணகுமார் ஹரி பிரசாத் பங்குகொள்ளவுள்ளார்.57 கிலோ எடைப் பிரிவில், 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் இவர் பங்கெடுக்கவுள்ளார்.
தாய்லாந்திற்கு பயணமாக முன்னர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இன்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றக்கொண்டார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் ,உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி,வாசுதேவன் ஆகியோரும் மாணவனிற்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.