காத்தான்குடி ஆரையம்பதி பகுதிகளில் மாடுகள் மற்றும் வீடு உடைத்து திருடிய இரு திருடர்கள் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் மாடு திருடிய மற்றும்   காத்தான்குடியில் வீடு உடைத்து  8 இலச்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியன வெளிநாட்டு பணம் ஜபோன் திருடிய சம்பவங்கள் தொடர்பாக இருவரை நேற்று திங்கட்கிழமை (20) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த  ஏப்ரல் மாதம் 2ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வளர்த்து வரும் இரு மாடுகளும் வழமைபோல வீட்டில் இருந்து வெளியே மேச்சலுக்கு சென்றுள்ள நிலையில் இரு மாடுகளையும் இருவர் திருடிச்சென்றுள்ள நிலையில் ஒருவரை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகிய வந்த அவனை சம்பவதினமான நேற்று இருவு கைது செய்தனர்.

அதேவேளை காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 11ம் திகதி வீட்டை உடைத்து அங்கிருந்த வெளிநாட்டுபணமான 7 ஆயிரத்து 500 றியால், ஜபோன், இலங்கை பணம் உட்பட 8 இலச்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியானவைகள திருட்டுப் போயிருந்தது.

இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பணம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இரு வெவ்வேறு    சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.