திருப்பெருந்துறை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்


மட்டக்களப்பு திருப்பெருந்துறை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம் எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.திருப்பெருந்துறை,விமான நிலைய வீதியில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டு அருள்பாலித்துவரும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00மணி தொடக்கம் மாலை 05மணி வரையில் அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.
மறுதினம் புதன்கிழமை காலை பஞ்சமுக ஆஞ்சநேய பெருமானின் மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறும்.