ஏறாவூர் வடக்கு மேற்க்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சாதனையாளர் பாராட்டுவிழா

கல்குடா கல்வி வலயத்தில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பும் கூட்டுறவுத்துறைக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வும் இன்று காலை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றது.ஏறாவூர் வடக்கு மேற்க்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவு மாவட்ட ஆணையாளர், கூட்டுறவு பிரதேச அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கல்குடா கல்குடா கல்வி வலயத்தில் சாதனைபடைத்த மாணவர்கள் இராஜாங்க அமைச்சரினாலும் அதிதிகளினாலும் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான நிதிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் ஏறாவூர் வடக்கு மேற்க்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான புதிய அங்கத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட அதிதிகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.