களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தின் 66 வது கலாசார விளையாட்டு நிகழ்வு


சித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களின் பேராதரவோடு நடாத்தப்படும் களுதாவளை
கெனடி விளையாட்டு கழகத்தின் 66வது கலாசார விளையாட்டு நிகழ்வு.கழகத்தின் தலைவர் திரு.த.சர்ஜீன் அவர்களின் தலைமையில் 21.04.2024 திகதி , பிற்பகல் 2.00 மணிக்கு
களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகவும் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் விசேட அதிதியாகவும் , மற்றும் ஏனைய அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இதன் போது பல கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.

இதன் போது தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மெய்வல்லுனர் வீரர்கள் , கெனடி கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கழகத்தின் சிரேஸ்ட வீரர்கள் ஆகியோர் கௌரவிக்க பட உள்ளார்கள்.

இந்த நிகழ்வின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட நிகழ்வு கடந்த 12.04.2024 திகதி நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.