மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்யாலயத்தில் தரம் 12 ,கலைப் பிரிவில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கல்வி கற்றும் இரு மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கல்வி கற்கும் ஆணந்தன் யதுசன் ஆகிய மாணவன் தனக்கு பிரத்தியேக வகுப்புகளுக் தான் கிரான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாலும் தன்னால் போக முடியாத நிலையில் உள்ளதாலும் தனக்கென ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் சுதர்சன் விங்கன் அவர்களின் சகோதரியான நல்லையா ஞானமலர் அவர்களின் மகனான பாரதிதாசன் என்பவரின் நினைவாக இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் சுதர்சன்,பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் கிழக்கு சுவிஸ் உதயம் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பினால் பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)