மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளம்குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக்குழியில் புதையுண்டு நேற்று உயிரிழந்துள்ளனர்.
சந்தனமடு ஆற்றில் குளித்தவேளை சேற்றுக்குழியில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய தெய்வநாயகம் திசாகரன் மற்றும்,24 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான சிறிதரன் லிகிதரன் ஆகிய இருவருமே உயிரிழந்ததாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த இருவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.