வாகரை ஊரியன்கட்டில், குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம்


மட்டக்களப்பு வாகரை ஊரியன்கட்டில், குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதுடன், ஆனந்தன் என்ற 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே காயமுற்றுள்ளார்.

காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது, அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.