மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணப்படும் இறால் வளர்ப்பு காணிகளை செய்கை பண்ணும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நேற்று (12) வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திரு. சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான், வர்த்தக இராஜாங்க அமைச்சர் கௌரவ ச.வியாழேந்திரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.மேனகா புவிக்குமார்ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது 40 பயனாளிகளுக்கு அனுமதிபத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.