"அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வின் ஏற்பாடாக இன்று 2024.03.12ம் திகதி ம,தெ,மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ்,சுதாகர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற "போதைக்கு பாவனையினை தடை செய்வோம்" பெண்களின் பேரணியானது கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து பட்டிப்பளை பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
இந் நிகழ்வானது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி புவிக்குமார் மேனகா அவர்களின் தலைமையில் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர், (சமூக அபிவிருத்தி) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி வலய பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவர், நிருவாக உறுப்பினர்கள், CBO தலைவர்கள், பயனாளிகள் என பலரின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.