கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் பேராசிரியராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மண்டூரை சேர்ந்த சதானந்தன் ஆரம்ப கல்வியை மண்டூர் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை புனித மைக்கேல் கல்லூரியிலும் பூர்த்திசெய்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபட்டம் மற்றும் முதுமாணி என பல்வேறு உயர் பட்டப்படிப்புகளை பூர்த்திசெய்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியான இவர் பேராசிரியராக பதிவு உயர்வுபெற்றுள்ளார்.
இவர் புகழ்பூத்த எழுத்தாளரும் ஆய்வாளரும் முன்னாள் அதிபருமான மண்டூரை சேர்ந்த தில்லைநாதன் அவர்களின் புதல்வன் ஆவார்.