மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசெயலகப் பிரிவில் வெள்ள அனர்த்ததினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன
லண்டன் வோள்தஸ்ரோ கற்பக வினாயகர் ஆலயத்தின் அனுசரணையில் அகிலன் பவுண்டேசனால் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், கிராமஉத்தியோகத்தர்,சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதாரஉத்தியோகஸ்தர் கலந்து கொண்டு இதனை வழங்கிவைத்தனர்.
வேத்துச்சேனை கிராமத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
லண்டன் வோள்தஸ்ரோ கற்பக வினாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஸ்ணனிடம் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.