நாசிவன் தீவு கட்டுமுறிவு பாலத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

 


க.ருத்திரன்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவன் தீவு கட்டுமுறிவு பாலத்தில் அருகில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை கல்குடா சுழியோடிகள் மற்றும் ஜக்கிய எமஜென்சி அமைப்பின் உதவியினால் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று மாலை தொடக்கம் காணமல் போனவரை தேடும் பணியில் கல்குடா சுழியோடிகள் ஈடுபட்டிருந்தனர்.நேற்று மாலை வெள்ளிக்கிழமை தமது சக நண்பர்கள் 4பேருடன் குளிக்கச் சென்றவர் குறித்த ஆற்றுப்பகுதியில் நிலவிய அதிக வெள்ள நீரோட்டத்தினால் அடித்து செல்லப்பட்டிருந்தார்.ஏனைய மாணவர்கள் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முயற்சி பலனின்றி போயுள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவித்தனர்.வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மாஹிர் ஆத்திக் வயது -17 என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.குறித்த பாலத்தின் மேலால் வெள்ள நீர் வழிந்தோடுவதனால் போக்குவரத்து தடைப்பட்டு காணப்படுகிறது.